நித்யானந்தா மீது வழக்குப் பதிவு

நித்யானந்தா மீது அகமதாபாத் காவல் துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் உயர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக தனது மகள்களை நித்யானந்தா தனது ஆஸ்ரமத்தில் சிறை வைத்து இருந்ததாக குஜராத்தைச் சேர்ந்தவர் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து காவல் துறை சோதனை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் ஆஸ்ரமத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.