Chennai Rains: அதிகாலை குளிர்ச்சி- தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுத்துக் கட்டிய மழை

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று அதிகாலை நல்ல மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது


இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்