அதிர்ச்சியூட்டிய சங்கராபரணி ஆறு; எங்கே அந்த இரண்டு பேர்

சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட இருவரை தீயணைப்புத்துறை தீவிரமாக தேடி வருகின்றன


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விடூர் அணை அமைந்துள்ளது. 32 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் 3,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் விடூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது


இதையொட்டி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது