இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்க வேண்டும் என இந்தியா வந்துள்ள மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிபிசி தமிழிடம் தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் ஈழத்தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்துவந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் .
"இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்கு. ஆனால் இன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை அரசினால் முழுமையாக மீறப்பட்டு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்கனை மீறி, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் வேரூன்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.