இந்திய மக்களிடையே காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி மக்கள் அனைவரும் 21 நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்

இந்திய மக்களிடையே காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி மக்கள் அனைவரும் 21 நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் பாலிவூட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், சுய ஊரடங்கில் தன் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்து எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும் சல்மான் இந்த சமயத்தில் தனக்கு பிடித்தமான ஓவியங்கள் வரைந்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர்கள் கத்ரீனா கைப், ரகுல் ப்ரீத் சிங், தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தத்தம் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.


 

ஹாலிவுட் கலைஞர்கள் ஜெசிக்கா அல்பா, ஜுலியா ராமர்ட்ஸ் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டதோடு, தனிமைப்படுத்தப்பட்ட இச்சமயத்தில் மேக்-அப் இல்லாமல் இருக்கும் தங்கள் படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் விளையாட்டு வீரர்களான மெஸ்ஸி, உசேன் போல்ட் உள்ளிட்டோர் டிஸ்யு பேப்பரை கீழே விழாமல் தங்கள் கால்களால் தட்டி விளையாடி வருவது பிரபலமடைந்துள்ளது. இன்னும் பலரும் பல விதமாக இந்த சுய தனிமைப்படுத்துதல் நேரத்தில் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.


Popular posts
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
Image
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
Image
அதனால், இதுவரை, ஒரு லட்சம் மளிகை தொகுப்புகள் கூட விற்கப்படாமல், கடைகளில் தேக்கம் அடைந்துள்ளன
தரமற்ற ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள் முகம் சுழிப்பு
Image